உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வட கிழக்கு பருவ விதைப்புக்கு தயாராகுங்க விவசாயிகளே!

வட கிழக்கு பருவ விதைப்புக்கு தயாராகுங்க விவசாயிகளே!

கோவை; கோவை, வேளாண் பல்கலையில் உள்ள, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் சத்திய மூர்த்தி அறிக்கை: வரும் நாட்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மிதமான மழையும், மற்ற பகுதிகளில் லேசான மழையும் எதிர்பார்க்கப்படுகிறது. மழை எதிர்பார்க்கப்படுவதால், வட கிழக்கு பருவ மழை கால விதைப்புக்கு நிலம் தயார் செய்யவும். மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரங்களுக்கு, கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம். சிறுதானியங்கள், நிலக்கடலை அறுவடையை மழை காரணமாக ஒத்தி வைக்கவும். கோழி, மாட்டுத் தீவனங்களில் மழை, காற்றில் ஈரப்பதம் காரணமாக, பூஞ்சான நச்சு பாதிப்பு ஏற்படலாம்; பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'இன்று முதல், வரும் 18ம் தேதி வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம். 19, 20ம் தேதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !