கொப்பரை கொள்முதல் விலை; விவசாயிகள் வரவேற்பு
சூலுார்; கொப்பரை கொள்முதல் ஆதரவு விலையை, மத்திய அரசு உயர்த்தி அறிவித்துள்ளதை, விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.வரும், 2025 பருவத்தில் கொள்முதல் செய்யப்படும் கொப்பரைக்கு, குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு உயர்த்தி அறிவித்துள்ளது. குறைந்த பட்ச ஆதரவு விலையாக குவிண்டாலுக்கு, 11ஆயிரத்து 582 ரூபாயும், பந்து கொப்பரைக்கு, குவிண்டால் ஒன்றுக்கு, 12 ஆயிரத்து, 100 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'தமிழகத்தில் தான் தென்னை விவசாயிகள் அதிகம் உள்ளனர். கொள்முதலுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை உயர்த்திட வேண்டும், என, கோரிக்கை விடுத்து வந்தோம். அதன் பயனாக, மத்திய அரசு ஆதரவு விலையை அதிகரித்துள்ளது வரவேற்கத்தக்கது. இதன் முலம் தென்னை விவசாயிகளின் வருமானம் சற்று அதிகரிக்கும்,' என்றனர்.