உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கடத்தல்காரனிடம் இருந்து மகனை மீட்ட போலீசாருக்கு தந்தை நன்றி

கடத்தல்காரனிடம் இருந்து மகனை மீட்ட போலீசாருக்கு தந்தை நன்றி

கோவை, கோவை துடியலுாரை சேர்ந்தவர் ஸ்ரீதர் சூர்யகுமார்; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கிருத்திகா, 41. தம்பதியின் மகன் ஜெயசூர்யா, 11. ஸ்ரீதரிடம் கார் டிரைவராக திருப்பூர் மாவட்டம், முத்துார் ஆலம்பாளையத்தை சேர்ந்த நவீன், 25 என்பவர் பணிபுரிந்து வந்தார்.சனிக்கிழமை மாலை, ஜெயசூர்யாவை டியூஷன் முடிந்து அழைத்து வராமல், காரில் கடத்தி சென்றார். ஸ்ரீதர் சூர்யகுமாருக்கு போன் செய்து, ரூ.12 லட்சம் கேட்டு மிரட்டினார்.புகாரின் பேரில், துடியலுார் போலீசார் வழக்கு பதிந்து, ஈரோடு மாவட்டம் பவானியில் சிறுவனுடன் பதுங்கி இருந்த நவீனை, கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்த ஸ்ரீதர் சூர்யகுமார், சிறுவனை விரைந்து காப்பாற்றிய போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்.செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''போலீசார் விரைந்து செயல்பட்டு என் மகனை மீட்டுள்ளனர். பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றதால் என் மகன் தப்ப முயற்சிக்கவில்லை. என்னிடம் பணிபுரிந்த கார் டிரைவருக்கு நான் பணம் தரவேண்டும். அதற்காக தான் என் மகனை கடத்தியதாக கூறப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை. அவர் என்னிடம், 10 நாட்களுக்கு முன்னர்தான் பணியில் சேர்ந்தார். குடும்ப தேவைக்காக ரூ.16 ஆயிரம் பணம் பெற்றுள்ளார்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை