உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரோட்டில் சிறுத்தை நடமாட்டத்தால் அச்சம்

ரோட்டில் சிறுத்தை நடமாட்டத்தால் அச்சம்

வால்பாறை,; வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால், சுற்றுலா பயணியர் கவனமாக செல்ல வேண்டும், என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.வால்பாறையில், கடந்த சில மாதங்களாக மக்கள் நெருக்கம் மிகுந்த, நகரப்பகுதியில் இரவு நேரத்தில் சிறுத்தைகள் ஜோடியாக நடந்து செல்கின்றன. சுற்றுலா பயணியர் அதிகளவில் தங்கி செல்லும், வால்பாறை நகரில் சிறுத்தை நடமாடுவதால் பீதியடைந்துள்ளனர். இந்நிலையில், பொள்ளாச்சி ரோட்டில் ரொட்டிக்கடை பகுதியில், நேற்று முன்தினம் இரவு ஹாயாக சிறுத்தை நடந்து செல்வதை அந்த வழியாக வாகனத்தில் சென்ற சுற்றுலா பயணியர் படம் பிடித்து, சமூக வளைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறை -பொள்ளாச்சி ரோட்டில் சிதோஷ்ணநிலை மாற்றத்தால், சமீப காலமாக வனவிலங்குகள் அதிகளவில் தென்படுகின்றன. மலைப்பாதையில் சுற்றுலா பயணியர் வாகனங்களை மெதுவாகவும், கவனமாகவும் இயக்க வேண்டும்.வன விலங்குகள் தென்பட்டால், அருகில் செல்ல வோ, புகைப்படம் எடுக்கவோ கூடாது. மீறினால் வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை