மேலும் செய்திகள்
வாழையை ருசிக்க வந்த ஒற்றை யானை விரட்டியடிப்பு
16-Jan-2025
வால்பாறை; வால்பாறை நகரை ஒட்டியுள்ள எஸ்டேட் பகுதியில், பகல் நேரத்தில் சிறுத்தை பதுங்குவதால், தொழிலாளர்கள் பீதியில் உள்ளனர்.வால்பாறை நகரை ஒட்டியுள்ள பகுதியில் சவராங்காடு எஸ்டேட் உள்ளது. சமீப காலமாக இந்தப்பகுதியில் முகாமிடும் சிறுத்தை, இரவு நேரத்தில் வால்பாறை நகரில் உள்ள கக்கன்காலனி, காந்திநகர், காமராஜ்நகர் உள்ளிட் பகுதியில் சுற்றுகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் சவராங்காடு எஸ்டேட் பகுதியை ஒட்டியுள்ள காமராஜ்நகர் பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட்டில், பகல் நேரத்தில் சிறுத்தை நடமாடுவதை கண்ட மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.பொதுமக்கள் கூறுகையில், 'வால்பாறையில் சமீப காலமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக, யானை, சிறுத்தை, கரடி, காட்டுமாடு உள்ளிட்ட வன விலங்குகள் பகல் நேரத்தில் எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு, தொழிலாளர்களை அச்சுறுத்தி வருகின்றன.இந்நிலையில், நகரை ஒட்டியுள்ள சவராங்காடு தேயிலை எஸ்டேட்டில் பகல் நேரத்தில் சிறுத்தை நடமாடுவதால், குழந்தைகள் வெளியில் செல்லவோ, விளையாடவோ முடியாத நிலை உள்ளது. மக்களை அச்சுறுத்தி வரும், சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்,' என்றனர்.
16-Jan-2025