உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெண் பலாத்காரம்: தொழிலாளி கைது

பெண் பலாத்காரம்: தொழிலாளி கைது

பொங்கலுார்: மேற்கு வங்கத்தின், 24 வடக்கு பர்கானா மாவட்டத்தை சேர்ந்த 21 வயது பெண், தனது கணவருடன் திருப்பூர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில், மேற்கு வங்கத்தை சேர்ந்த ராமகிருஷ்ண மொண்டால், 32 என்பவரும் வேலை செய்து வந்தார். நேற்றுமுன்தினம் இரவு, தொழில் நிறுவனத்தில் இருந்து வீட்டுக்கு சென்றபோது, தம்பதியருக்குள் ஏற்பட்ட தகராறில் பெண் கீழே விழுந்து மயக்க மடைந்தார். குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக தான் வீட்டில் இருப்பதாக தெரிவித்த கணவர், மயக்கம் தெளிவித்து அந்தப் பெண்ணை ராமகிருஷ்ண மொண்டாலுடன், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ராமகிருஷ்ண மொண்டால், அந்த பெண்ணை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். நள்ளிரவில் வீட்டுக்குத் தப்பிவந்த பெண், கணவரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்தார். அவினாசிபாளையம் போலீசார் வழக்கு பதிந்து ராமகிருஷ்ண மொண்டாலை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை