உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவில்களில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

கோவில்களில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

வால்பாறை; வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் உள்ள கோவில்களில் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது.வால்பாறை அடுத்துள்ள பன்னிமேடு எஸ்டேட், 2வது டிவிஷன் சந்தனமாரியம்மன் கோவிலின், 17ம் ஆண்டு திருவிழா கடந்த, 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் நாள் தோறும், காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜையும், 7:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது. நாளை(14ம்தேதி) இரவு 9:30 மணிக்கு சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.வரும், 15ம் தேதி பகல், 12:00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணமும், 12:30 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது.* வால்பாறை அண்ணாநகர் உத்ரகாளியம்மன் கோவிலின், 46வது ஆண்டு திருவிழா கடந்த, 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாளை(14ம் தேதி) இரவு, 9:00 மணிக்கு நடுமலை ஆற்றிலிருந்து சக்தி கும்பம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 15ம் தேதி காலை, 5:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், 6:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை கோவில் தலைவர் மீனாம்மாள், தர்மகர்த்தா செல்வநாயகி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை