உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போத்தனுார் - பரூனி இடையே பண்டிகை கால சிறப்பு ரயில்

போத்தனுார் - பரூனி இடையே பண்டிகை கால சிறப்பு ரயில்

கோவை: பண்டிகை கால கூட்டநெரிசலை தவிர்க்கும் விதமாக, போத்தனுார்-பரூனி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, போத்தனுார்-பரூனி(06187) சிறப்பு ரயில் நாளை மதியம், 2:00 மணிக்கு போத்தனுாரில் இருந்து புறப்பட்டு, 26ம் தேதி ஞாயிறு இரவு, 8:00க்கு பீஹார் மாநிலம் பரூனி சென்றடையும். மறுமார்க்கத்தில், பரூனி-போத்தனுார்(06188) சிறப்பு ரயில் வரும், 27ம் தேதி பரூனியில் இருந்து இரவு, 9:00க்கு புறப்பட்டு, 30ம் தேதி அதிகாலை, 3:30க்கு போத்தனுார் வந்தடையும். இத்துடன், 16 ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள், இரண்டாம் வகுப்பு பொது பிரிவு பெட்டிகள் இரண்டு இணைக்கப்பட்டிருக்கும். திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், சுல்லுார்ப்பேட்டை, கூடுர், நெல்லுார், ஓங்கல், விஜயவாடா உள்ளிட்ட ஸ்டேஷன்களில் நின்று செல்லும். அதேபோல், போத்தனுார்-பரூனி(06193) சிறப்பு ரயில் வரும், 25ம் தேதி மதியம், 2:00க்கு போத்தனுாரில் இருந்து புறப்பட்டு, 27ம் தேதி இரவு, 8:00க்கு பரூனி சென்றடையும். பரூனி-போத்தனுார் ரயிலானது(06194) வரும், 28ம் தேதி இரவு, 9:00 மணிக்கு பரூனியில் இருந்து புறப்பட்டு, 31ம் தேதி அதிகாலை, 3:30க்கு போத்தனுார் வந்தடையும். இத்துடன், மூன்றடுக்கு ஏ.சி., வகுப்பு பெட்டி இரண்டு, ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள் எட்டு, இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் எட்டு இணைக்கப்பட்டிருக்கும் என, தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி