உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஐந்தாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டி

ஐந்தாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டி

கோவை; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், ஐந்தாவது டிவிஷன் 'எக்கர் பம்ப்ஸ் டிராபி' கிரிக்கெட் போட்டி, எஸ்.என்.எம்.வி., மைதானத்தில் நடந்து வருகிறது.ஜி.கிரிக்கெட் கிளப் அணியும், சன் ஸ்டார் அணியும், நேற்று மோதின. முதலில் பேட்டிங் செய்த ஜி.கிரிக்கெட் கிளப் அணி, 46.6 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 165 ரன்கள் எடுத்தது.வீரர்கள் தங்க ஸ்ரீநிவாசன், 67 ரன்களும், கவுதம், 47 ரன்களும் அதிகபட்சமாக எடுத்தனர். எதிரணி வீரர் சந்திரசேகரன் நான்கு விக்கெட்கள் வீழ்த்தினார்.அடுத்து விளையாடிய, சன் ஸ்டார் அணியினர், 31.2 ஓவரில் எட்டு விக்கெட்களை இழந்து, 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். ஞானசேகரன், 32 ரன்கள் அதிகபட்சமாக எடுத்தார். எதிரணி வீரர் பிரகதீஸ் நான்கு விக்கெட்கள் வீழ்த்தினார்.அடுத்து, கே.எப்.சி.சி., அணியும், அக் ஷயா இன்ஜி., கல்லுாரி அணியும் மோதின. பேட்டிங் செய்த கே.எப்.சி.சி., அணி, 48.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 234 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, வீரர் மோகன் குமார், 44 ரன்கள், ஜெயக்குமார், 39 ரன்கள் விளாசினர்.எதிரணி வீரர்களான அரவிந்த் நான்கு விக்கெட்களையும், நிர்மல்குமார் மூன்று விக்கெட்களையும் வீழ்த்தினர்.அடுத்து விளையாடிய, அக்ஷயா அணியினர், 38.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 145 ரன்கள் எடுத்தனர்.வீரர் அந்தோணி ராபின்ஸ், 38 ரன்களும், விமல், 32 ரன்களும் எடுத்தனர். எதிரணி வீரர் வினோத்குமார் நான்கு விக்கெட்கள் வீழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ