உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஐந்தாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டி

ஐந்தாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டி

கோவை; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.) சார்பில் ஆறாவது டிவிஷன் போட்டி, பி.எஸ்.ஜி. ஐ.எம்.எஸ். உள்ளிட்ட மைதானங்களில் நடக்கிறது. ஏ.எஸ்.பி.என்டர்பிரைசஸ் அணியும், சி.டி.சி.ஏ. ஜூனியர் கோல்ட்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஏ.எஸ்.பி., அணியினர், 41 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 117 ரன் எடுத்தனர். எதிரணி வீரர்கள் அஷ்வின் மற்றும் ஹரிஹரன் ஆகியோர், தலா மூன்று விக்கெட்கள் வீழ்த்தினர். அடுத்து விளையாடிய, சி.டி.சி.ஏ., ஜூனியர் கோல்ட்ஸ் அணியினர், 32.2 ஓவரில், 49 ரன் மட்டுமே எடுத்தனர். ஐந்தாவது டிவிஷன் போட்டியில், பெனடிக் போர்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும், சீஹாக்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெனடிக் போர்ஸ் கிரிக்கெட் கிளப் அணியினர், 23 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 72 ரன் எடுத்தனர். எதிரணி வீரர் கஜேந்திரன் ஐந்து விக்கெட்கள் வீழ்த்தினார். அடுத்து களம் இறங்கிய சீஹாக்ஸ் கிரிக்கெட் கிளப் அணியினர், 15.3 ஓவரில், 74 ரன் எடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !