குப்பை கிடங்கில் தீ; 3 நாட்களாக புகையுது
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, 7வது வார்டுக்கு உட்பட்ட கிரீன் கார்டன் பகுதியில் உள்ள பாறை குழியில் பேரூராட்சி குப்பை கொட்டப்படுகிறது. இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன் குப்பைக்கு தீ வைக்கப்பட்டது. இப்போது வரை புகைந்து கொண்டிருக்கிறது. மேலும், அருகில் உள்ள வீடுகளை புகை மண்டலம் சூழ்ந்துள்ளதால், குடியிருப்பு பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். வீட்டில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை சுவாசக்கோளாறால் பாதிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், புகையை கட்டுப்படுத்த குப்பை மீது தண்ணீர் ஊற்றி அணைக்காமல் தாமதப்படுத்துகின்றனர். இதனால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.