உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீட்டில் தீ விபத்து; பொருட்கள் சேதம்

வீட்டில் தீ விபத்து; பொருட்கள் சேதம்

வால்பாறை; வால்பாறை கக்கன் காலனியை சேர்ந்தவர் லோகியம்மாள். இவர், புதுமார்க்கெட் பகுதியில் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு கடைக்கு சென்றார்.நேற்று மதியம் பூட்டிய வீட்டில் இருந்து திடீரென தீ பரவியதை கண்ட மக்கள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். குறுகலான ரோடு என்பதாலும், வீடு உயரத்தில் இருந்ததாலும், வாகனம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.இதனிடையே, அப்பகுதி மக்கள் திரண்டு சென்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி, தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து, வால்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ