உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நார் தொழிற்சாலையில் தீ விபத்தால் சேதம்

நார் தொழிற்சாலையில் தீ விபத்தால் சேதம்

ஆனைமலை; ஆனைமலை அருகே, கோட்டூரில் தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. ஆனைமலை அருகே, கோட்டூர் இந்திரா நகர் பாலு என்பவரது தென்னை நார் உலர்களம் மற்றும் தென்னை நார் தொழிற்சாலை உள்ளது. நேற்று மாலை பணியாளர்கள் வழக்கம் போல பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, தென்னை நார் ஒதுக்க பயன்படுத்திய வாகனம், கான்கிரீட் தரையில் உரசியதில் தீப்பொறி ஏற்பட்டு தென்னை நாரில் வேகமாக தீ பரவியது. கட்டி அடிக்கும் இயந்திரம் தீப்பற்றி எரிந்தது. உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர், ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி