மேலும் செய்திகள்
துாய்மை பணியாளர்களுக்கு அரிசி, புத்தாடை வழங்கல்
21-Oct-2025
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, குருநல்லிபாளையம் தனியார் தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. கிணத்துக்கடவு, குருநல்லிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தண்டபாணி, 47, என்பவர் கடந்த, 8 ஆண்டுகளாக தென்னை நார் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு, 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றர். தென்னை நார் குடோன் அருகே டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்நிலையில், நேற்று மதியம் குடோனில் மின் கசிவு காரணமாக, தென்னை நாரில் தீ பிடித்து பரவ துவங்கியது. இதை கண்ட தொழிலாளர்கள், கிணத்துக்கடவு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில், குடோனில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான டிராக்டர், இயந்திரங்கள் மற்றும் தென்னை நார் உள்ளிட்டவை தீயில் கருகி சேதமடைந்தன. இந்த தீ விபத்தில், அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்கள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலீசார் விசாரிக்கின்றனர்.
21-Oct-2025