உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிணற்றில் விழுந்த கடமான்; தீயணைப்புத்துறை  மீட்பு

கிணற்றில் விழுந்த கடமான்; தீயணைப்புத்துறை  மீட்பு

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, கிணற்றில் தவறி விழுந்த கடமானை தீயணைப்புத்துறையினர் மீட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.பொள்ளாச்சி அருகே, மாரப்பகவுண்டன்புதுார் மோகன் என்பவரது தோட்டத்தில், வழி தவறி வந்த கடமான், கிணற்றில் எதிர்பாராதவிதமாக விழுந்து உயிருக்கு போராடியது. இது குறித்து, வனத்துறை, தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்துக்கு வந்த வனவர் திலக் மற்றும் தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலர் பாலாஜி தலைமையில், கடமானை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கிணற்றில் தத்தளித்த மானை, தீயணைப்புத்துறையினர் கயிறு மற்றும் வலையை கட்டி, லாவகமாக உயிருடன் மீட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி