உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மேற்கு தொடர்ச்சிமலையில் தீ! அலட்சிய நபர்களால் அவதி

மேற்கு தொடர்ச்சிமலையில் தீ! அலட்சிய நபர்களால் அவதி

தொண்டாமுத்தூர்; கோவையில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில், தொடர்ந்து ஏற்பட்டு வரும் காட்டுத்தீயால், வனப்பகுதிகள் அழிவதோடு, வனத்துறையினரும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.கோவை வனக்கோட்டத்தில் போளுவாம்பட்டி, கோவை, மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய ஏழு வனச்சரகங்கள், 670 சதுர கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ளன.கோவை வனக்கோட்ட வனப்பகுதிகளில், ஏராளமான வனவிலங்குகளும், பறவை இனங்களும் உள்ளன. வனத்துறையில் போதிய பணியாளர்கள் இல்லாததால், பணியாளர்களுக்கு பணிச்சுமை கூடியுள்ளது. அதோடு, வனவிலங்குகள், ஊருக்குள் புகுவதை தடுக்க, வனத்துறையினர் சிறப்பு குழுக்கள் அமைத்து, கண்காணித்து வருகின்றனர்.கோவை வனக்கோட்டத்தில் உள்ள, பெரும்பாலான வனச்சரகங்கள், மாநில எல்லையாகவும் உள்ளன. இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. இதில், வனப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மரங்கள் எரிந்து சாம்பலாகின்றன.கோவை வனக்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில், ஏற்படும் பெரும்பாலான காட்டுத்தீ, கேரள மாநில வனப்பகுதியில் உருவாகி, நம் வனப்பகுதிக்குள் வருகிறது.போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட தேவராயபுரம் வனச்சுற்றுக்குட்பட்ட பெருமாள்முடி அருகில் உள்ள வனப்பகுதியிலும், கோவை வனச்சரகத்திற்குட்பட்ட கெம்பனூர் வனச்சுற்றுக்குட்பட்ட, கிழக்குப்பாறை வனப்பகுதியிலும், கடந்த 5 நாட்களுக்கு முன் தீ ஏற்பட்டது.கேரள வனப்பகுதியில் ஏற்பட்ட தீ, இங்கும் பரவி வந்துள்ளது. ஐந்து நாட்களுக்குப்பின் நேற்று, 40 பேர் கொண்ட வனத்துறையினர், குழுவாக தீயை அணைக்க புறப்பட்டுச் சென்றனர். இதுபோன்ற சம்பவங்களால், ஏற்கனவே ஆட்கள் பற்றாக்குறையில் இருக்கும் வனத்துறையினருக்கு, பணிச்சுமை மேலும் கூடுகிறது.பெயர் வெளியிட விரும்பாத வனத்துறையினர் சிலர் கூறுகையில், 'நம் வனப்பகுதிகள், கேரள மாநில வனப்பகுதியை ஒட்டி உள்ளன. கேரள மாநிலத்தில், வனப்பகுதியில் சீமார் புற்கள் அதிகம் உள்ளன. அவற்றை அறுவடை செய்யப்பட்ட பின், மீதமுள்ள புற்களில் தீ வைக்கின்றனர்.அப்போது தீயில், சீமார் புற்களின் விதைகள் தெறித்து, பல இடங்களிலும் விழும். சில நாட்களில் கோடை மழை பெய்யும்போது, அந்த விதைகள் முளைக்கின்றன.இது போன்ற சம்பவங்களில், கேரள மாநிலத்தில் வைக்கப்படும் தீ, நம் வனப்பகுதிக்குள் வருகிறது. மாநில எல்லையிலும் வனத்துறை சார்பில், தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், அதிவேகத்தில் காற்று வீசும்போது, தீ பரவுகிறது. சில இடங்களில், இயற்கையாகவே காட்டுத்தீ ஏற்படுகிறது' என்றனர்.

டவர்கள், கேமராக்கள்'

மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறியதாவது:கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில், காட்டுத்தீயை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது வரை, 400 கி.மீ., தொலைவிற்கு தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளன.அதோடு, விலங்குகள் நடமாட்டம் மற்றும் காட்டுத்தீ ஏற்படுவதை கண்காணிக்க, வனப்பகுதியில் டவர்கள் மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நவீன தீ தடுப்பு உபகரணங்களை கொண்டு, காட்டுத்தீயை அணைத்து வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை