உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / துடியலுார் ரயில் பாதை அருகே தீ

துடியலுார் ரயில் பாதை அருகே தீ

பெ.நா.பாளையம்; துடியலுார் அருகே அசோகபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட என்.ஜி.ஜி.ஓ., காலனி ரயில்வே கேட், ரயில் பாதை அருகே குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.நேற்று மதியம் குப்பை மேட்டில் பற்றிய தீ, மள, மளவென பரவியது. பாசஞ்சர் ரயில் போக்குவரத்து உள்ள இப்பாதை அருகே தீ கொழுந்து விட்டு எரிந்ததால், உடனடியாக ரயில்வே கேட் கீப்பர் மற்றும் பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த கவுண்டம்பாளையம் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.கோடை காலத்தில் குருடம்பாளையம், அசோகபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகள் அருகே ஆங்காங்கே குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.அதில், இரவு நேரங்களில் தீ வைப்பதால், தீ விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ஊராட்சி நிர்வாகம் அவ்வப்போது குப்பைகளை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ