குடிசைகளுக்கு தீ: போலீஸ் விசாரணை
அன்னூர்: பொகலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கூளே கவுண்டன் புதூரில், அரசு வழங்கிய இலவச இடத்தில், 20க்கும் மேற்பட்ட குடும்பங்களின் தற்காலிக குடிசைகள் இருந்தன. நேற்று (நவ.,21) நள்ளிரவில் இந்த குடிசைகளில் தீப்பிடித்தது. அன்னுார் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைக்க போராடினர். எனினும் நான்கு குடிசைகள் முழுவதும் கருகின. ' மர்ம நபர்கள் எங்கள் குடிசைகளுக்கு தீ வைத்திருக்கலாம் என சந்தேகப்படுகிறோம்' என்றனர் அப்பகுதி மக்கள். சிறுமுகை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.