மேலும் செய்திகள்
தீயணைப்புத்துறையினர் தீ தடுப்பு செயல்விளக்கம்
02-Sep-2025
சூலுார்; மழை வெள்ள பாதிப்புகளில் சிக்கியவர்களை மீட்பது குறித்து, சூலுார் பெரிய குளத்தில் தீயணைப்பு துறையினர் செயல்விளக்கம் அளித்தனர். பருவ மழை துவங்க உள்ள நிலையில், மழை வெள்ள பாதிப்புகளில் சிக்கியோரை மீட்பது குறித்த ஒத்திகை, சூலுார் பெரிய குளத்தில், தீயணைப்பு துறையினரால் நடத்தப்பட்டது. வருவாய்த்துறை, தீயணைப்பு துறை அலுவலர்கள் பங்கேற்றனர். குளத்தில் தத்தளித்தவரை தீயணைப்பு வீரர்கள், டியூப், தெர்மாகோல், பிளாஸ்டிக் கேன்கள், ஸ்டெச்சர் உள்ளிட்டவை களை பயன்படுத்தி மீட்பது குறித்து தத்ரூபமாக செயல் விளக்கம் அளித்தனர்.நிலைய அலுவலர் ராமசுப்பிரமணியம் பேசுகையில், ''பேரிடர் காலத்தில் பொதுமக்கள் பதட்டப்படக்கூடாது. கையில் இருக்கும் பொருட்களை கொண்டு, பாதுகாப்பாக தப்பிக்க முயற்சி செய்யவேண்டும். பொருட்களை எவ்வாறு பயன்படுத்துவது குறித்தும், அவர்களுக்கு முதலுதவி செய்வது குறித்தும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்,'' என்றார். தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.
02-Sep-2025