உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  முதலாமாண்டு துவக்க விழா

 முதலாமாண்டு துவக்க விழா

கோவை: ஜே.சி.டி.பொறியியல், தொழில்நுட்பக் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான துவக்க விழா நடந்தது. இன்போசிஸ் துணைத்தலைவர் சுஜித்குமார், கல்வி, திறன் மேம்பாடு, குழுப்பணி, ஒழுக்கம் மற்றும் தொடர்ச்சியான கற்றலின் முக்கியத்துவத்தை விளக்கினார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சி.பி.சி.எல்., முன்னாள் செயல்பாட்டு மேலாளர் பிரதீப் குமார் டேனியல், மாணவர்களுக்கு தொழில்துறையின் எதிர்பார்ப்புகள், நடைமுறைத் திறன்களின் முக்கியத்துவம், தொழில்முறை ஒழுக்கம் மற்றும் எதிர்கால வேலைவாய்ப்புக்கான தயாரிப்பு குறித்த வழிகாட்டுதல்களை வழங்கினார். ஜே.சி.டி.அறக்கட்டளை துணைத் தலைவர் கவுதமன் ராஜமாணிக்கம், செயலாளர் துர்காசங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்