உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உக்கடம் குளத்தில் மிதக்கும் சோலார்; தினமும் 693 யூனிட் மின்சாரம் உற்பத்தி

உக்கடம் குளத்தில் மிதக்கும் சோலார்; தினமும் 693 யூனிட் மின்சாரம் உற்பத்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை : உக்கடம் பெரிய குளத்தில், 50 சென்ட் நீர் பரப்பில், 1.45 கோடி ரூபாயில் 'மிதக்கும் சோலார்' அமைக்கப்படுகிறது. நாளொன்றுக்கு, 693 யூனிட் மின்னுற்பத்தி கிடைக்குமென கணக்கிடப்பட்டுள்ளது.'நமக்கு நாமே' திட்டத்தில், காய்கறி கழிவில் காஸ் தயாரிக்கும் திட்டத்துக்கு, சுவிட்சர்லாந்து துாதரகம், ஏற்கனவே நிதி வழங்கி, கோவை பாரதி பார்க் வளாகத்தில் செயல்படுத்தப்படுகிறது. இதே போல உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் அமைக்க நிதி ஒதுக்கியது.அதில், 1.45 கோடி ரூபாயில், மிதக்கும் சோலார் மின்னுற்பத்தி நிலையம் அமைக்கப்படுகிறது. 50 சதவீத பங்களிப்பாக, 72.50 லட்சம் ரூபாயை சுவிட்சர்லாந்து துாதரகம் வழங்குகிறது. மீதமுள்ள, 72.50 லட்சம் ரூபாயை தமிழக அரசு வழங்குகிறது. உக்கடம் குளத்தில், 50 சென்ட் நீர் பரப்பில், 280 சோலார் தகடுகள் மிதக்க விடப்பட்டுள்ளன. மின் இணைப்பு வழங்கும் பணி நடந்து வருகிறது. நாளொன்றுக்கு, 693 யூனிட் மின்னுற்பத்தி செய்யலாம் என கணக்கிடப்பட்டிருக்கிறது. இதுவரை, 60 சதவீத பணிகள் முடிந்துள்ளன. டிரான்ஸ்பார்மர், இன்வெர்ட்டர் பணி செய்ய வேண்டியுள்ளது. இப்பணி முழுமையாக முடிய, இன்னும் இரு மாதங்களாகும். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ''உக்கடம் குளத்தில் மிதக்கும் சோலார் பணி முடிய, இன்னும் சில மாதங்களாகும். உற்பத்தியாகும் மின்சாரம் கணக்கிடப்பட்டு, மின்வாரியத்தில் வழங்கப்பட்டு, மற்ற இடங்களில் மாநகராட்சி பயன்படுத்திய மின்சார அளவில் இருந்து கழித்துக் கொள்ளப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

vbs manian
அக் 18, 2024 09:05

பிரமாதமான திட்டம். பெரிய நீர்நிலைகள் எல்லாவற்றிலும் இதை செய்ய வேண்டும். மின் தட்டுப்பாடு மறையும்.


கீரன் கோவை
அக் 18, 2024 08:29

1 KWH = 1 Unit


jgn
அக் 18, 2024 08:13

o, The Commissioner Coimbatore Municipal Corporation [Corporation Address] Coimbatore, Tamil Nadu Sமிதக்கும் சூரிய மின்சக்தி திட்டத்திற்கு இந்திய நிறுவனங்கள் மற்றும் சென்னை ஐஐடியை ஈடுபடுத்தும் திட்டம் அன்புடையீர் / மேடம், இந்த கடிதம் உங்களுக்கு நலம் தேடும் என்று நம்புகிறேன். சுவிட்சர்லாந்து நிறுவனங்களுடன் இணைந்து கோவையில் மிதக்கும் சூரிய மின்சக்தி திட்டத்தை உருவாக்குவது குறித்து நடந்து வரும் விவாதங்களுக்கு பதிலளிக்க நான் இதை எழுதுகிறேன். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் அதிநவீன தொழில்நுட்பத்தை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம் என்பது பாராட்டத்தக்கது என்றாலும், செலவுகளைக் குறைப்பது மட்டுமல்லாமல், உள்ளூர் நிபுணத்துவம் மற்றும் ஒத்துழைப்பை வளர்க்கும் ஒரு ஆலோசனையை வழங்க விரும்புகிறேன். நீங்கள் அறிந்தபடி, மிதக்கும் சூரிய தொழில்நுட்பம் உலகளவில் இழுவையைப் பெற்று வருகிறது, மேலும் சுவிஸ் நிறுவனங்கள் இந்தத் துறையில் மேம்பட்ட ஆராய்ச்சிக்கு நன்கு அறியப்பட்டவை. இருப்பினும், வெளிநாட்டு நிறுவனங்களுடன் பிரத்தியேகமாக கூட்டு சேர்வது திட்டத்தின் ஒட்டுமொத்த செலவை கணிசமாக அதிகரிக்கும். இந்த விஷயத்தில், சூரியசக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்பங்களில் கணிசமான நிபுணத்துவத்தை வளர்த்துள்ள சென்னை ஐ.ஐ.டி போன்ற இந்திய நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது குறித்து ஆராய நான் முன்மொழிகிறேன். குறிப்பாக, ஐஐடி சென்னை, நிலையான தொழில்நுட்பங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக ஒரு நட்சத்திர நற்பெயரைக் கொண்டுள்ளது. அவர்களை ஈடுபடுத்துவதன் மூலம், உலகத் தரம் வாய்ந்த மற்றும் செலவு குறைந்த உள்ளூர் நிபுணத்துவத்தை நாம் தட்டிக் கேட்க முடியும். கூடுதலாக, சூரிய உள்கட்டமைப்பில் நிபுணத்துவம் பெற்ற இந்திய நிறுவனங்கள் உள்ளூர் சுற்றுச்சூழல், வானிலை நிலைமைகள் மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்புகள் பற்றிய தங்கள் அறிவைக் கொண்டு வரலாம், திட்டத்தின் சீரான செயல்பாட்டை உறுதி செய்யலாம். இது கணிசமான செலவு சேமிப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், "இந்தியாவில் தயாரிப்போம்" முன்முயற்சியை ஊக்குவித்து, உள்ளூர் கண்டுபிடிப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகளை ஊக்குவிக்கும். சுருக்கமாக, சுவிஸ் நிறுவனங்களின் நிபுணத்துவம் மற்றும் இந்திய நிறுவனங்கள் மற்றும் ஐ.ஐ.டி சென்னை போன்ற நிறுவனங்களின் திறன்களை உள்ளடக்கிய ஒரு கலப்பின அணுகுமுறை திட்டத்தின் நீண்டகால வெற்றிக்கு பயனளிக்கும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் உள்ளூர் திறமைகளை வளர்ப்பதற்கு பங்களிக்கும் அதே வேளையில், இந்த மூலோபாயம் புத்தாக்கம் மற்றும் செலவு-செயல்திறன் ஆகியவற்றுக்கு இடையில் சமநிலையை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறே


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
அக் 18, 2024 07:37

693 யூனிடஸ் என்றால் எத்தனை KW ..... தெரிந்தவர்கள் பதிலலியுங்கள் ப்ளீஸ்....!!!


sankaranarayanan
அக் 18, 2024 07:18

நல்ல முயற்சி விரைவில் மயிலை கபாலீஸ்வரர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி குளங்களில் இதுபோன்று நிறுவப்பட்டால் குறைந்த பட்சம் அந்தந்த பகுதிகளுக்காவது மின்சாரம் தடை இல்லாமல் கிடைக்கும்


Lion Drsekar
அக் 18, 2024 06:50

பார்ட்டிகள் ஆனால் மாநரகாட்சி அந்த இடத்துக்கு சொத்துவரி, தொழில்வரி, போடாமல் இருக்கவேண்டும், எங்கு யார் தொழில் துவங்கினாலும், துவங்கியவர்களுக்கு வருமானம் வருகிறதோ இல்லையோ, அந்த அந்த துறைக்கு வருமானத்துக்கு போக்குவரத்துக்கு காவலர்கள்போல் வேகமாக செயல்படுகிறார்கள், யாரை என்ன சொல்வது, வந்தே மாதரம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை