உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மழையால் நொய்யல் ஆற்றில் தொடர்கிறது வெள்ளப்பெருக்கு

மழையால் நொய்யல் ஆற்றில் தொடர்கிறது வெள்ளப்பெருக்கு

தொண்டாமுத்தூர் : கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, நொய்யல் ஆற்றில் மூன்றாவது நாளாக, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.கோவை மேற்கு தொடர்ச்சி மலையில், கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நூற்றுக்கணக்கான ஓடைகளில், நீர் ஆர்ப்பரித்து வருகிறது. இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலையில், எங்கு காணினும், வெள்ளியை உருக்கி விட்டது போல், ஓடைகளில் கொட்டும் நீர், மலைகளில் ரம்மியமாக காட்சியளிக்கிறது.இந்நிலையில், 3 மாதங்களாக வறண்டு கிடந்த நொய்யல் ஆற்றில், கடந்த, 24ம் தேதி நீர்வரத்து துவங்கியது. தொடர் கனமழையால், கடந்த, 25ம் தேதி, நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், நொய்யல் ஆற்றில் நேற்று மூன்றாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரைச் சாவடி தடுப்பணையில், வினாடிக்கு 650 கன அடி நீர், வெளியேறி வருகிறது. கீழ்ச்சித்திரைசாவடி வாய்க்கால் மற்றும் குனியமுத்தூர் வாய்க்காலில், 50 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு, கோவையில் உள்ள குளங்களுக்கு நீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை