உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காய்ச்சல் பரவல் அதிகரிப்பு; மருத்துவ முகாம் நடக்குமா?

காய்ச்சல் பரவல் அதிகரிப்பு; மருத்துவ முகாம் நடக்குமா?

வால்பாறை; வால்பாறையில், காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ள நிலையில், சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில், கடந்த நான்கு மாதங்களாக தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்தது. இதனால், சீதாஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு, பகல், இரவு நேரங்களில் கடுங்குளிர் நிலவுகிறது. காற்றுடன் கூடிய மழை பரவலாக பெய்யும் நிலையில், குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவருக்கும் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர். பொதுமக்கள் கூறியதாவது: வால்பாறையில் தற்போது சாரல்மழை பெய்யும் நிலையில் கடுங்குளிர் நிலவுவதால், காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக, குழந்தைகள் அதிகம் பாதிக்கபட்டுள்ளனர். எஸ்டேட் பகுதியில் பனி தாக்கம் அதிகமாக உள்ளதாலும், கடுங்குளிராலும் காய்ச்சல், சளி, இருமல், பிரச்னைகளால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், மக்கள் நலன் கருதி, ஞாயிற்றுக்கிழமை நாட்களில் சுகதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி