உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விதிமீறும் பஸ்களை பிடிக்க பறக்கும் படை

விதிமீறும் பஸ்களை பிடிக்க பறக்கும் படை

கோவை: பண்டிகை சமயங்களில் ‘பெர்மிட்’ இல்லாமல் இயக்குதல் உள்ளிட்ட விதிமீறல்களில் ஆம்னி பஸ்கள் ஈடுபடுகின்றன. தீபாவளி பண்டிகை 8ம் தேதி கொண்டாடப்படும் நிலையில் விதிமீறல் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க, கோவை சரகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தலைமையில் 10 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, காந்திபுரம், கொடிசியா அருகே, கணியூர் சுங்கச்சாவடி, அவிநாசி ரோடு, திருச்சி ரோடு, பொள்ளாச்சி ரோடு உள்ளிட்ட இடங்களில் இப்பறக்கும் படையினர் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஆம்னி பஸ்கள் விதிமீறல் குறித்து 0422 2248449 என்ற எண்ணில் மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம் என, போக்குவரத்து துறையினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !