உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிரிப்டோ கரன்சி மீது கவனம்; தங்கம் விலை சரிவு

கிரிப்டோ கரன்சி மீது கவனம்; தங்கம் விலை சரிவு

கோவை; சர்வதேச அளவில் தங்கம் விலை குறைந்ததை தொடர்ந்து கோவையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு, 4,040 ரூபாயாக குறைந்துள்ளதால். தங்க நகை ஆபரணங்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வழக்கமாக தங்கம் பவுனுக்கு, 50 ரூபாயிலிருந்து, 100 ரூபாய் வரை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். தங்கம் விலை, கடந்த மாத இறுதியில் தீபாவளிக்கு முந்தைய நாளன்று கிராம், 7,440 ரூபாய் ஆக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டதால், ஒரு பவுன், 59,520 ரூபாய்க்கு விற்றது. இது தங்கநகை வாங்குபவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்நிலையில் ரூபாய் மதிப்பு போன்றவை அமெரிக்க டாலர், பங்குச்சந்தையோடு தொடர்புடையதால், அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பின் வெற்றிக்குப் பிறகு தங்கம் விலை தடாலடியாக சரிந்தது. அந்த வகையில், கடந்த, 13 நாட்களில் தங்கம் விலை கிராமுக்கு, 505 ரூபாயாக குறைந்து, பவுனுக்கு 4,040 ரூபாயாக குறைந்தது.நேற்றைய நிலவரப்படி, கிராம் ஒன்றுக்கு, 6,935 ரூபாய்க்கு விற்றதால், சவரன் ஒன்றுக்கு, 55,480 ரூபாய்க்கு விற்றது. பண்டிகை காலம் முடிந்த சூழலில் தங்கம் விலை குறைந்ததால் தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழ்நாடு தங்கம் வெள்ளி வைர வியாபாரிகள் சம்மேளன தலைவர் சபரிநாத் கூறியதாவது: அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பின் வெற்றிக்குப் பிறகு நடக்கும் மாற்றங்களால் தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. அமெரிக்க டாலர் குறியீடு வலுவானதாலும், டிரம்ப் பதவி ஏற்றதாலும், கிரிப்டோ கரன்சி விலை (பிட் காயின்) ஏற்றமடைந்துள்ளது. அமெரிக்க பங்குச் சந்தைகளில் நடக்கும் ஏற்றம், பணவீக்கம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து சரிவை தொட்டு வருகிறது.மக்களின் கவனம் கிரிப்டோ கரன்சி மற்றும் டாலர் மீது திரும்பியுள்ளதும் தங்கம் விலை குறைவதற்கு காரணமாகும். இவ்வாறு சபரிநாத் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ