வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கண்டுபுடுச்சிட்டேன்... கண்டுபிடிச்சிட்டேன்.
சூலுார்: ''கால நிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள, மரங்களும், குளங்களும் அதிகம் வேண்டும்,'' என, சென்னை வானிலை ஆராய்ச்சி மைய முன்னாள் இயக்குனர் ரமணன் அறிவுறுத்தினார்.கோயமுத்தூர் பில்டர்ஸ் மற்றும் கான்ட்ராக்டர்ஸ் அசோசியேஷன், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில், காலநிலை மாற்றம் மற்றும் அதன் தாக்கம் குறித்த கருத்தரங்கம் அரசூர் கே.பி.ஆர்., கல்லுாரி வளாகத்தில் நடந்தது. கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு நிறுவனர் மணிகண்டன், சிபாகா அமைப்பு நிர்வாகிகள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.சென்னை புயல் எச்சரிக்கை மையம், வானிலை ஆராய்ச்சி மைய முன்னாள் இயக்குனர் ரமணன் பேசியதாவது:உலகம் முழுக்க பெரும் சவாலாக இருப்பது கால நிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் ஆகும். கால நிலை மாற்றத்தால் காற்று மாசுபடும். வெப்ப அலை வீசும். புவி வெப்பமயமாவதால் வாயுக்கள் அதிகமாக வெளிவரும். பனி படலங்கள் உருகும். ஜீவ நதிகள் இல்லாத நிலை ஏற்படும். பனிப்பொழிவு இருக்கும் இடங்களில் மழை பெய்யும். பவள பாறைகள் பாதிப்படையும். கட்டுக்கடங்காத காட்டுத்தீ ஏற்படும்.காலநிலை மாற்றத்தையும், புவி வெப்ப மயமாதலையும் எதிர்கொள்ள மரங்களும், குளங்களும் அதிகரிக்க வேண்டும். மரங்கள் கார்பன் டை ஆக்சைடை கிரகித்து ஆக்ஸிஜனை அளிக்கிறது. மரங்கள் வளர்ப்பதில் அனைவரும் கைகோர்க்க வேண்டும்.கால நிலை மாற்றத்தை எதிர்கொள்ள புதிய தொழில்நுட்பங்கள் அவசியம். வீடுகளின் மாடியின் தளத்தில் வெள்ளை வண்ணத்தை பயன்படுத்த வேண்டும். ஏ.சி.,பயன்பாட்டை குறைக்க வேண்டும். மாடித்தோட்டங்கள் அமைக்க வேண்டும். அனைவருக்குமான உணவுதேவையை பூர்த்தி செய்ய, குறைந்த நீரில் குறைந்த நாட்களில் விளையும் பயிர்களை பயிரிடவேண்டும். வாழ்வியலில் மாற்றங்கள் வேண்டும். தொழில் துறையிலும் புவியை பாதிக்காத தொழில்நுட்பங்கள் கொண்டுவரப்பட வேண்டும். ஒவ்வொருவரும் வெப்பமயமாதலை தடுக்க முயற்சி செய்யவேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
கண்டுபுடுச்சிட்டேன்... கண்டுபிடிச்சிட்டேன்.