வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மேடு மற்றும் பள்ளமாக இடங்களை ஒரு அளவு சமன் செய்ய வேண்டும்
அன்னுார்; அவிநாசி மேட்டுப்பாளையம் நான்கு வழிச் சாலை பணி வேகம் அடைந்துள்ளது. அவிநாசி, ஈரோடு பகுதியில் இருந்தும் தென் மாவட்டங்களில் இருந்தும் அவிநாசி, அன்னூர் வழியாக மேட்டுப்பாளையம் மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.அவிநாசியில் இருந்து மேட்டுப்பாளையம் வரை தற்போது இருவழிச்சாலை மட்டுமே உள்ளது. இதை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்த, தமிழக அரசு 238 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.கடந்த ஜனவரியில் பணி துவங்கியது. அவிநாசியில் இருந்து திருப்பூர் மாவட்ட எல்லையான நரியம்பள்ளி வரை பணிகள் வேகமாக நடந்தன. எனினும் கோவை மாவட்ட பகுதியில் பணி மெத்தனமாக இருந்தது.இந்நிலையில், கடந்த சில நாட்களாக கஞ்சப்பள்ளி பிரிவு, ஊத்துப்பாளையம், குன்னத்தூராம் பாளையம் பகுதியில், ஒரே சமயத்தில் ஐந்து பொக்லைன் இயந்திரங்களும், ஐந்து டிப்பர் லாரிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.சாலையில் மையப் பகுதியிலிருந்து இருபுறமும் தலா 28 அடி அகலத்திற்கு சாலை அமைக்கும் பணி நடக்கிறது. ஒன்றரை அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டு அதில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு அதன் மீது அழுத்தம் தரப்பட்டு, பின்னர் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. மூன்று இடங்களில் பாலம் கட்டும் பணியும் நடக்கிறது.ஒருபுறம் கஞ்சப்பள்ளி பிரிவிலிருந்து மேட்டுப்பாளையம் வரை, 1,342 மரங்களை வெட்டி அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது.அதிக அளவில் இயந்திரங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டதால், தற்போதுள்ள இருவழிச் சாலை விரைவில் நான்கு வழிச்சாலையாக பயன்பாட்டுக்கு வரும். தாமதம் இல்லாமல் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் அவிநாசியில் இருந்து அன்னுார் வழியாக மேட்டுப்பாளையம் செல்ல முடியும். விபத்துக்கள் குறையும் என்பதால் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மேடு மற்றும் பள்ளமாக இடங்களை ஒரு அளவு சமன் செய்ய வேண்டும்