உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வங்கி அதிகாரியிடம் ரூ.16 லட்சம் மோசடி

வங்கி அதிகாரியிடம் ரூ.16 லட்சம் மோசடி

கோவை; ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடம் ரூ.16 லட்சம் மோசடி செய்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கோவை கே.கே.புதுார் பகுதியை சேர்ந்தவர் சேதுபதி, 75, ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. இவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு மெசேஜ் வந்தது. அதில் பகுதி நேர வேலையாக ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என இருந்தது.இதையடுத்து சேதுபதி மெசேஜில் குற்றிப்பிட்டு இருந்த எண்ணை தொடர்பு கொண்டு தனது விவரங்களை அனுப்பினார். அதை தொடர்ந்து அந்த மர்ம நபர்கள் தங்களது வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பும் படி தெரிவித்துள்ளனர். இதனை நம்பி சேதுபதி, பல்வேறு தவணைகளாக அவர்கள் அனுப்பிய வங்கி கணக்கிற்கு ரூ.16.25 லட்சத்தை அனுப்பி வைத்தார்.அதன் பின் அவருக்கு எந்த லாப தொகையும் வரவில்லை. செலுத்திய தொகையும் திரும்ப பெற முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சேதுபதி, இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ