உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவில்களுக்கு இலவச மின்சாரம்! பூஜாரிகள் பேரவை வலியுறுத்தல்

கோவில்களுக்கு இலவச மின்சாரம்! பூஜாரிகள் பேரவை வலியுறுத்தல்

பொள்ளாச்சி,; கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கிராம கோவில் பூஜாரிகள் பேரவையினர், பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.தமிழ்நாடு கிராம கோவில் பூஜாரிகள் பேரவை கோவை கோட்ட அமைப்பாளர் கோவிந்தராஜன் தலைமையில், நிர்வாகிகள், பூஜாரிகள், பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.மனுவில் கூறியிருப்பதாவது:அனைத்து கோவில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். ஹிந்து சமய அறநிலையத்துறையின் கோவில் திருப்பணி நிதி, இரண்டு லட்சம் ரூபாய் என்பதை, ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தி அனைத்து கோவில்களுக்கும் பாரபட்சமின்றி வழங்க வேண்டும்.ஹிந்து சமய அறநிலையத்துறையின் ஒரு கால பூஜைத்திட்ட கோவில் பூஜாரிகளுக்கு, தற்போது வழங்கப்படும் தொகுப்பூதியம், ஆயிரம் ரூபாயை, ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.தற்போது செயல்படாமல் முடங்கி கிடக்கும், ஹிந்துசமய அறநிலையத்துறையின் ஓய்வூதியக்குழு, நலவாரியக்குழு ஆகியவற்றை செம்மைப்படுத்தி விரைவில் செயல்படுத்த வேண்டும்.ஹிந்து சமய அறநிலையத்துறை கிராம கோவில் பூஜாரிகள் நலவாரியத்தில் பதிவு செய்வதற்கும், ஓய்வூதியம் பெறுவதற்கும் பூஜாரிகளின் ஆண்டு வருமானம், 72 ஆயிரம் ரூபாய் என்பதை, பொதுப்பட்டியலுக்கு மாற்றி, 90 ஆயிரம் ரூபாய் முதல், ஒரு லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய் வரை வருமான சான்றிதழ் பெற ஆணை பிறப்பித்து நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்கு, தமிழக முதல்வர், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை