மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாமில், 227 பேர் பங்கேற்றனர்.பொள்ளாச்சி வடக்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான, இலவச மருத்துவ முகாம், பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.உள்ளடங்கிய கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். வட்டார வள மைய பொறுப்பு ஆசிரியர் பயிற்றுநர் ஸ்வப்னா முன்னிலை வகித்தார்.தொடக்க கல்வி மாவட்ட அலுவலர் சாந்தகுமாரி, நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வடிவேல் முருகன், வடக்கு வட்டார கல்வி அலுவலர் வெள்ளியங்கிரி பங்கேற்றனர்.இம்முகாமில், 227 மாற்றுத்திறனாளிகள் பயன்பெற்றனர். மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகம் சார்பாக, 35 பேருக்கு மருத்துவ சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட்டது. 43 பேருக்கு இலவச பஸ் மற்றும் ரயில் பயண சலுகை சான்றிதழ் வழங்கப்பட்டது.