மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம்
30-Oct-2024
சூலுார்; சூலுாரில் நடந்த இலவச முகாமில், 109 மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.சூலுார் வட்டார ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், சார்பில், சூலுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவ முகாம் நடந்தது. 18 வயதுக்கு உட்பட்ட, 109 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.மேலும், தேசிய அடையாள அட்டை, இலவச பஸ் பயண சலுகைக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. உதவி உபகரணங்கள் தேவைப்படுவோருக்கு அளவீடுகள் எடுக்கப்பட்டன. அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு ஆலோசனை மற்றும் பரிந்துரை வழங்கப்பட்டது. மாவட்ட திட்ட அலுவலர், வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுனர் (பொறுப்பு) பிரியா, வட்டார கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
30-Oct-2024