உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பரிசோதனைகள் இலவசம்; சலுகையில் சிகிச்சைகள்

பரிசோதனைகள் இலவசம்; சலுகையில் சிகிச்சைகள்

கோவை; கோவை டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை சார்பில், நாட்டின் 79வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், பொதுமக்களுக்கு கண் பரிசோதனை முகாம், இலவசமாக நடைபெற உள்ளது. வரும் செப்., 7 வரை நடைபெறும் முகாமில், கண் மருத்துவப் பரிசோதனை இலவசமாக செய்யப்பட உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட கண்புரை அறுவை சிகிச்சைகளில், 15 சதவீதம் மற்றும் லேசிக் சிகிச்சையில் 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆப்டிகல் பிரேம்களுக்கு, 25 சதவீதம் தள்ளுபடி கிடைக்கிறது. முகாமில், விழித்திரை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மதுசூதன், கார்னியா, ஒளிவிலகல் நிபுணர் டாக்டர் முகமது ஷாபாஸ், கண்புரை அறுவை நிபுணர் டாக்டர் மும்தாஜ், பொது கண் மருத்துவ நிபுணர் டாக்டர் பானுலட்சுமி ஆகிய நிபுணர்கள் சேவையளிக்க உள்ளனர். முன்பதிவு, விபரங்களுக்கு, 77369 05222 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !