உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உள்ளூரில் விற்க இளநீர் கிடைப்பதில்லை; ரோட்டோர வியாபாரிகள் கவலை

உள்ளூரில் விற்க இளநீர் கிடைப்பதில்லை; ரோட்டோர வியாபாரிகள் கவலை

பொள்ளாச்சி : மதிப்புக் கூட்டு பொருட்கள் தயாரிப்பதற்கான தேவை அதிகரிப்பால், உடல் உஷ்ணம் குறைக்க போதியளவு இளநீர் கிடைப்பதில்லை என, வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.பொள்ளாச்சி, ஆனைமலை, உடுமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, 2 லட்சம் முதல் 5 லட்சம் எண்ணிக்கையில், பிற நாடுகளுக்கு இளநீர் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது தவிர, தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் இளநீர் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.அதன்படி, பொள்ளாச்சி நகரில், கோடை காலத்தில், 40 ரூபாய்; மழைக்காலங்களில் 20 ரூபாய் வரை இளநீர் விற்கப்படும். இந்நிலையில், இளநீர் வரத்து குறைவு, மதிப்புக் கூட்டு பொருட்கள் தயாரிப்பதற்கான தேவை அதிகரிப்பால், உடல் உஷ்ணம் குறைக்க போதியளவு இளநீர் கிடைப்பதில்லை என, வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால், நகரில், ஒரு இளநீர் 50 ரூபாய்க்கு விற்பனையானது.வியாபாரி லட்சுமி கூறியதாவது:கோவை, உடுமலை, பாலக்காடு வழித்தடங்களில், நெடுஞ்சாலையோரம் ஆங்காங்கே இளநீர் விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் பலரும், பகலில் நிலவும் கடும் வெயில் காரணமாக, உடல் உஷ்ணம் தணிக்க, இளநீர் வாங்கி பருகுகின்றனர்.ஆனால், தற்போது, இளநீரில் இருந்து ஜூஸ், மில்க் ேஷக், அல்வா உள்ளிட்ட மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கின்றனர். எந்தவொரு சுப நிகழ்ச்சியிலும் மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்க, இளநீர் பயன்படுத்தப்படுகிறது. இதனால், உள்ளூர் விற்பனைக்கு இளநீர் கிடைப்பதில்லை. அதிக விலை கொடுத்து வாங்கி, விற்க வேண்டியுள்ளது.இவ்வாறு, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ