உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றணும்; ஓய்வூதியர் சங்கத்தினர் வலியுறுத்தல்

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றணும்; ஓய்வூதியர் சங்கத்தினர் வலியுறுத்தல்

உடுமலை : பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை தமிழக முதல்வர் நிறைவேற்ற வேண்டும், என அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் மாவட்ட பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.உடுமலையில், அனைத்து அரசு துறை ஓய்வூதியர் சங்க திருப்பூர் மாவட்ட பேரவை கூட்டம் நேற்று நடந்தது.மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். வட்டக்கிளைத்தலைவர் தாசன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், பொருளாளர் மேகவர்ணன், இணைச்செயலாளர்கள் பாலசந்திரமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநில துணைத்தலைவர் அரங்கநாதன் பேசினார்.இதில், தமிழக முதல்வர் சட்டசபை தேர்தலின் போது அறிவித்த பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதியர்களுக்கு 70 வயது முடிந்தவுடன், 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் என்ற வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.புதிய மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் கீழ், மாவட்ட அளவில் தீர்வு கண்டு தொகை விடுவிக்கவும், மத்திய அரசைப்போல், 20 ஆண்டு பணி முடித்தவர்களுக்கும் முழு ஓய்வூதியம், 21 மாதம், ஓய்வூதிய நிர்ணய நிலுவைத்தொகை, அகவிலைப்படி நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.புதிய மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான பிரீமியம் தொகையை, ரூ.350 ஆக குறைக்கவும், மாதந்தோறும், ரூ.ஆயிரம் மருத்துவ படி வழங்க வேண்டும்.ரயில் பயணங்களில், மூத்த குடிமக்களுக்கான பயண சலுகையை வழங்கவும், ஓய்வூதியர்களுக்கு வருமான வரி விலக்கு வழங்க வேண்டும், உட்பட, 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மேலும், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர், ஊராட்சி செயலாளர்கள், வனத்துறை காவலர்கள் என சிறப்பு ஓய்வூதியம் பெரும் அனைவருக்கும், குறைந்த பட்ச ஓய்வூதியமாக, ரூ.7,850 வழங்க வேண்டும்.இதனை வலியுறுத்தி, மாநில மையம் முடிவின் அடிப்படையில், தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை