மேலும் செய்திகள்
'ஓவர் பிரின்ட்' தபால் தலை பின்னணியில் ஆச்சரியம்
27-Oct-2024
'ஜி 20' என்பது, இந்தியா உட்பட 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றை உள்ளடக்கிய அமைப்பு. ஜி - 20 அமைப்பில் உள்ள நாடுகள், உலகின் கிட்டத்தட்ட 85 சதவீத உள்நாட்டு உற்பத்தியையும், 75 சதவீத வர்த்தகம் மற்றும் உலகின் மூன்றில் இரண்டு மடங்கு மக்கள் தொகையும் பிரதிபலிக்கிறது. அமைப்பின் தலைமை பொறுப்பை, 2022 டிச.,1ம் தேதி இந்தியா ஏற்றுக் கொண்டது.2023ம் ஆண்டு நவம்பர் வரை, இந்த தலைமை பொறுப்பில் இந்தியா இருந்தது. 2023 செப்.,9,10ம் தேதிகளில் டில்லியில் நடந்த, ஜி - 20 மாநாடு உலகளவில் இந்தியாவின் பெருமையை எடுத்துக்காட்டியது. இந்த மாநாட்டினை சிறப்பிக்கும் வகையில், இந்திய அஞ்சல் துறையின் சார்பில், சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.4. (நவ., 12,13ல் சுகுணா திருமண மண்டபத்தில், அஞ்சல் தலை கண்காட்சி நடக்கிறது. அனுமதி இலவசம். இதையொட்டி, தினம் ஒரு தபால் தலையின் வரலாறை காண்போம்).
27-Oct-2024