காந்தி மாநகர் அரசு பள்ளி மாணவர்கள்; வளரிளம் பருவ கல்வி போட்டியில் பர்ஸ்ட்
கோவை; தமிழக அளவில் நடந்த, வளர் இளம் பருவக்கல்வி போட்டியில், கோவை காந்தி மாநகர் அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்று, சாதனை படைத்துள்ளனர்.பள்ளி மாணவர்களுக்கு இடையே, மாநில அளவிலான வளர் இளம் பருவக் கல்வி சார்ந்த போட்டிகள், திருச்சியில் நடந்தன.இந்த போட்டியில், 38 மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். அதில் கோவையில் இருந்து பங்கேற்ற, காந்தி மாநகர் அரசு உயர் நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் கிருஷ்ணன், குகனேஸ்வரன், தருண்குமார், லக்ஷனா மற்றும் ஜெசிகா ஆகிய ஐந்து பேரும் முதலிடம் பெற்று, தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர்.அடுத்த ஆண்டு ஜன., 4ம் தேதி மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியரில் நடக்கும், தேசிய அளவிலான போட்டியில் இவர்கள் பங்கேற்க உள்ளனர்.வெற்றி பெற்ற மாணவர்களையும், வழிகாட்டியாக இருந்த ஆசிரியர்கள் ரோஸ்லின் கிரிஸ்டல் செல்வி, நிர்மலாதேவி ஆகியோரையும், பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி பாராட்டினார்.