உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

பெ.நா.பாளையம்; துடியலுார் புருசுண்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.துடியலுார் விநாயகர் கோவில் வீதியில் புருசுண்டி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி முதல் நாள் விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, வேதிகார்ச்சனை, முதல் கால யாக வேள்வி, தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு பிரசாதம் வழங்குதல், விநாயகருக்கு அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சிகள் நடந்தன. இரண்டாம் நாள் விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் கால யாக வேள்வி, தீபாராதனை தொடர்ந்து கும்பாபிஷேகம், அன்னதானம் நடந்தது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ