மேலும் செய்திகள்
மறியலில் ஈடுபட்ட 30 பேர் மீது வழக்கு
26-Sep-2025
கோவை: வாலிபரை மிரட்டி 'ஜி பே' வில் பணம் பறித்த கும்பலை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், கொங்க வேம்பு அருகேயுள்ள ஒட்டம்பட்டியை சேர்ந்தவர் சிலம்பரசன்,20; காந்திபுரத்தில் கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்து வந்த இவர், புலியகுளத்தில் தங்கி ேஹாட்டலில் பகுதி நேர வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, சிலம்பரசன், இவரது நண்பர் முத்துசாமி ஆகியோர் வேலை முடிந்து சென்ற போது, ஆறு பேர் கும்பல் கத்தியை காட்டி மறித்தனர். மது முடிக்க பணம் தருமாறு கேட்ட போது, இருவரும் மறுத்தனர். அப்போது, சிலம்பரசனை மிரட்டி ஏ.டி.எம். கார்டை பறித்து, பின் நம்பரை பெற்று, 10,000 ரூபாய் எடுத்தனர். பின்னர் கூகுள் பே வாயிலாக, கும்பலை சேர்ந்த ஒரு நபருக்கு. 7,300 ரூபாய் அனுப்ப வைத்தனர். பின்னர் இருவரையும் தாக்கி விட்டு தப்பினர். புகாரின் பேரில், ராமநாதபுரம் போலீசார் விசாரித்து, கூகுள் பே வாயிலாக பணம் அனுப்பிய மொபைல் எண்ணை வைத்து கும்பலை மடிக்கி பிடித்தனர். இது தொடர்பாக, அம்மன்குளத்தை சேர்ந்த மெய்யரசன்,22, விக்னேஷ்,20, ஏரிமேட்டை சேர்ந் நாகராஜன்,19, புலியகுளம் அண்ணா நகரை சேர்ந்த லியோ ஆகாஷ்,20, மேலும், 16 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் உள்பட ஆறு பேரை கைது செய்தனர். இவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டனர்.
26-Sep-2025