உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 5 விக்கெட்கள் வீழ்த்தி கவுதம் அபாரம்

5 விக்கெட்கள் வீழ்த்தி கவுதம் அபாரம்

கோவை; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் (சி.டி.சி.ஏ.,) சார்பில், முதலாவது டிவிஷன் போட்டி, பி.எஸ்.ஜி., - ஐ.எம்.எஸ்., உள்ளிட்ட மைதானங்களில் நடக்கிறது. கோவை டஸ்கர்ஸ் அணியும், ஸ்ரீ ராமகிருஷ்ணா மில்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் மோதின. கோவை டஸ்கர்ஸ் அணியினர் 41.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 165 ரன் எடுத்தனர். வீரர்கள் முகமது ரபீக் 43 ரன், சல்மான் கான் 41 ரன், சோமசுந்தரம் 36 ரன் எடுத்தனர்; எதிரணி வீரர் கவுதம் தாமரை கண்ணன் ஐந்து விக்கெட், பிரனேஷ் மூன்று விக்கெட் வீழ்த்தினர். ராமகிருஷ்ணா மில்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினர் 45.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 153 ரன் எடுத்தனர். வீரர் அபிஷேக் தன்வார் 37 ரன் எடுத்தார். எதிரணி வீரர் அரவிந்த் மூன்று விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து போட்டிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை