உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உழவர் உற்பத்தியாளர் நிறுவன பொதுக்குழு கூட்டம்

உழவர் உற்பத்தியாளர் நிறுவன பொதுக்குழு கூட்டம்

கருமத்தம்பட்டி: ஈசா அவுட் ரீச் வழிகாட்டுதல் படி, சூலூர் வட்டார விவசாயிகள் இணைந்து சென்னியாண்டவர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகின்றனர். தலைவர் மற்றும் ஐந்து இயக்குனர்கள், 317 விவசாய உறுப்பினர்கள் நிறுவனத்தில் உள்ளனர். நேரடியாக தேங்காய் மற்றும் கொப்பரை கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிறது. பயிர் வளர்ச்சி நிபுணர் மூலம் விவசாயிகளுக்கு நேரடியாக பயிற்சி அளித்து வருகிறது. விவசாயிகளுக்கு இலவசமாக மண் பரிசோதனை செய்து தருதல், வேளாண் விஞ்ஞானிகள் மூலம் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தல், மத்திய வேளாண் ஆராய்ச்சி மையங்கள் மூலம் குறைந்த விலையில் பயிர் வளர்ச்சி ஊக்கிகள் கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வழங்குதல் உள்ளிட்ட பணிகள் நிறுவனம் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நிறுவனத்தின் இரண்டாவது பொதுக்குழு கூட்டம், தலைவர் செல்வராஜ் தலைமையில் சோமனுாரில் நடந்தது. கடந்த கால செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சித்ரா பானு, வேளாண் உதவி அலுவலர் திருக்குமரன், ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சிவரஞ்சனி, அட்மா திட்ட தலைவர் செல்வராஜ் ஆகியோர் பேசினர். ஈஸ்வரன் வரவேற்றார். சி.இ.ஓ., கோகுல் நன்றி தெரிவித்தார். வரும் நாட்களில் வாழை கொள்முதல் செய்தல், விளை பொருட்கள் மற்றும் உர விற்பனை மையங்களை துவக்க பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ellar
செப் 28, 2024 06:34

இவ்வாறாக பல வகைகளில் விவசாயிகளுக்கும் மதிப்பளித்து வரும் தினமலர் நிறுவனத்திற்கு வணக்கங்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை