உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குழந்தை ஆரோக்கியத்துக்கு சத்தான உணவு கொடுங்க!

குழந்தை ஆரோக்கியத்துக்கு சத்தான உணவு கொடுங்க!

வால்பாறை: ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படும், அங்கன்வாடிகளில் ஆண்டு தோறும் செப்., மாதம் ஊட்டச்சத்து மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. வால்பாறை தாலுகாவில் மொத்தம் உள்ள, 43 அங்கன்வாடி மையங்களில், 920 குழந்தைகள் உள்ளனர். அங்கன்வாடி மையங்களில், ஊட்டச் சத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கோ-ஆப்ரேடிவ் காலனி அங்கன்வாடி மையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மேற்பார்வையாளர் சாந்தி தலைமை வகித்தார். அங்கன்வாடி பணியாளர் வளர்மதி வரவேற்றார்.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரிகள் பேசியதாவது:தாய்மார்கள், குழந்தைகளுக்கு இளம் வயது முதல் சத்தான உணவு வழங்க வேண்டும். தாய்மார்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான், குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்கும். குழந்தைகளுக்கு, பால், முட்டை, கொண்டைக்கடலை, உருளைக்கிழங்கு, பழ வகைகளை தினமும் கொடுக்க வேண்டும்.பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். சிறுதானிய உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். வீட்டிலேயே காய்கறி தோட்டம் அமைத்து, காய்கறி, கீரை வகைகளை உற்பத்தி செய்து, அவற்றை உணவில் அதிகளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஊட்டசத்து பற்றாக்குறை இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும்.இவ்வாறு, பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ