உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பல வண்ணங்களில் கோலப்பொடி விற்பனை

பல வண்ணங்களில் கோலப்பொடி விற்பனை

பொள்ளாச்சி ;பொள்ளாச்சி நகரின் பல பகுதிகளில், மார்கழி மற்றும் தைப்பொங்கலை முன்னிட்டு, பல வண்ணங்களில் கோலப்பொடி விற்பனை செய்யப்படுகிறது.மார்கழியில் பெண்கள் அதிகாலை எழுந்து, வீடுகளுக்கு முன் வண்ண கோலமிட்டு, அழகுபடுத்துவர். இதனாலேயே மார்கழியை ஆன்மிக மாதமாக கருதுகின்றனர்.இம்மாதம் முழுவதும் ஐயப்பன், முருகனுக்கு மாலை அணிந்த பக்தர்கள் அதிகாலையில் கோவில்களுக்கு சென்று, மார்கழி வழிபாடுகளில் பங்கேற்பர்.பெருமாள் கோவில்களில் மார்கழி திருப்பாவை பாசுரம் பாடி ஸ்ரீதேவி, பூதேவி பெருமாளுக்கு சிறப்பு அபிேஷகம் செய்து வழிபடுவர். மார்கழி மாதம், 30 நாட்களும் மற்றும் தை பொங்கல் வரை பெண்கள் வீட்டு வாசலில் கலர் கோலமிட்டு அழகுபடுத்துவர்.அவ்வகையில், பொள்ளாச்சி நகரின் பல பகுதிகளில், கோலப்பொடி விற்பனை ஜரூராக நடந்து வருகிறது. இங்கு, வெள்ளை, சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள் என, 10க்கும் மேற்பட்ட வண்ணங்களில் கோலப் பொடி விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பெண்கள் இவற்றை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.வியாபாரிகள் கூறுகையில், '200 கிராம் கோலப்பொடி 10 முதல் 20 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கோலம் போடத் தெரியாதவர்களின் கவலையை பூர்த்தி செய்யும் பொருட்டு, பல்வேறு வடிவங்களில் கோல அச்சுகளும் விற்கப்படுகின்றன. மார்கழி மாதம் துவக்கத்தில் இருந்தே கோலப்பொடி விற்பனை அமோகமாக நடந்து வருகிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி