உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தங்க மதிப்பீட்டாளர் பயிற்சி: கோவையிலும் நடத்தணும்

தங்க மதிப்பீட்டாளர் பயிற்சி: கோவையிலும் நடத்தணும்

கோவை: தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (இ.டி.ஐ.ஐ-டி.என்.,) சார்பில், சென்னையில் வழங்கப்படுவது போன்று, கோவையிலும் தமிழக அரசு சார்பில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி, அதிக எண்ணிக்கையில் நடத்தப்பட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. இ.டி.ஐ.ஐ-டி.என்., சார்பில், சென்னையில் தொடர்ச்சியாக, 5 நாள் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வழங்கப்படுகிறது. குறைந்தபட்ச கல்வித்தகுதி 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். இதேபோன்று கோவையிலும், தொடர்ச்சியாக பயிற்சி வகுப்புகள் அரசு சார்பில் நடத்தப்பட வேண்டும் என, நகை தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் கூறியதாவது: கோவையில் தொடர்ந்து, அரசுத் துறைகள் சார்பில் இலவசமாக அல்லது மிகக் குறைந்த கட்டணத்தில், தங்க மதிப்பீட்டாளர் பயிற்சி நடத்தப்பட வேண்டும். இது, இப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். ஏற்கனவே சில இடங்களில் இப்பயிற்சி எப்போதாவது நடத்தப்படுகிறது. ஆனால் மக்களுக்குத் தெரிவதில்லை. எனவே, அப்பயிற்சி குறித்து ஊடகங்கள் வாயிலாக அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ