உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பஸ்சில் கிடந்த தங்க சங்கிலி உரியவரிடம் ஒப்படைப்பு

பஸ்சில் கிடந்த தங்க சங்கிலி உரியவரிடம் ஒப்படைப்பு

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, பஸ்சில் தவற விட்ட இரண்டு சவரன் தங்க சங்கிலியை, பஸ் டிரைவர், கண்டக்டர், போலீஸ் முன்னிலையில் பெண்ணிடம் ஒப்படைத்தனர். பொள்ளாச்சி - நெகமம் செல்லும் ரோட்டில், வழித்தட எண், 20/40 என்ற அரசு பஸ் சென்றது. இந்த பஸ்சில் கடந்த, 5ம் தேதி இரண்டு சவரன் தங்க சங்கிலி ஒன்று இருந்தது. இதைக் கண்ட பஸ் டிரைவர் நெகமத்ததை சேர்ந்த பரமசிவம், கண்டக்டர் பொங்காளியூரைச் சேர்ந்த மாசிலாமணி ஆகியோர், பொள்ளாச்சி கிளை - 3க்கு தகவல் தெரிவித்து, கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். தங்க சங்கிலி காணாமல் போனது குறித்து, செங்குட்டுப்பாளையத்தை சேர்ந்த பாலாமணி, டிரைவர், கண்டக்டரிடம் விசாரித்தார். அவர்கள், போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தததாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, நேற்று போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்த நகையை, பாலாமணியிடம் வழங்கப்பட்டது. டிரைவர், கண்டக்டருக்கு அவர் நன்றி கூறினார். பஸ் ஊழியர்களுக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !