இ.பி.எஸ்., பிறந்தநாள் குழந்தைகளுக்கு தங்கம்
கோவை; அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த 12ம் தேதி, கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 12 குழந்தைகளுக்கு அ.தி.மு.க., சார்பில் தங்கம் பரிசாக வழங்கப்பட்டது.முன்னாள் அமைச்சர் வேலுமணி, 12 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் தங்கச் சங்கிலி பரிசளித்தார். எம்.எல்.ஏ., ஜெயராம், கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.