டேக்வாண்டோ போட்டியில் நான்கு மாணவர்களுக்கு தங்கம்
கோவை; மாரண்ண கவுடர் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் நான்கு தங்கம், ஏழு வெள்ளி, ஆறு வெண்கல பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளனர்.மாவட்ட அளவிலான 'டேக்வோண்டோ' விளையாட்டு போட்டிகள் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில் நடந்தது. இதில், அரசு உதவிபெறும் மாரண்ண கவுடர் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.தங்கம் வென்ற ஆறுமுகம், சபரி, வாசன், சரஸ்வதி குமாரி, ரக்ஷிதா ஆகியோர் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். தவிர, ஏழு பேர் வெள்ளி பதக்கம், ஆறு பேர் வெண்கல பதக்கம் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளி தலைமை ஆசிரியை திலகம், உடற்கல்வி ஆசிரியர் தங்கராஜா ஆகியோர் பாராட்டினர்.