உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சேதமான மாநகர சாலைகளுக்கு நல்ல காலம் பொறக்குது! சீரமைக்க ரூ.195.63 கோடி வருது!

சேதமான மாநகர சாலைகளுக்கு நல்ல காலம் பொறக்குது! சீரமைக்க ரூ.195.63 கோடி வருது!

கோவை : கோவை மாநகரப் பகுதியில் சேதமாகியுள்ள, 466.53 கி.மீ., நீளமுள்ள, 3,301 சாலைகளை சீரமைக்க, ரூ.195.63 கோடி கேட்டு, நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு கோரி, தமிழக அரசுக்கு மாநகராட்சி கருத்துரு அனுப்பியுள்ளது.கோவை நகரப் பகுதியில் குடிநீர் குழாய் பதிக்க, பாதாள சாக்கடை குழாய் மற்றும் இணைப்பு வழங்க தோண்டப்பட்ட சாலைகள், போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன.24 மணி நேர குடிநீர் திட்டத்தில், 'சூயஸ்' நிறுவனத்தினர் குறுக்கும், நெடுக்குமாக குழிகள் தோண்டி குழாய் பதித்திருப்பதால், வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.மண் சாலையாக இருப்பதால், மழைக்காலங்களில் சேறும் சகதியுமாகி, நடக்கக் கூட முடியாத நிலை ஏற்படுகிறது.இம்மாத துவக்கத்தில், முதல்வர் ஸ்டாலின் கோவை வந்தார். அவருடன் வந்த தலைமை செயலர் முருகானந்தம், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகளின் நிலைமையை நேரில் பார்வையிட்டார். அதன்பின், 200 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.இதைத்தொடர்ந்து, மண்டலம் மற்றும் வார்டு வாரியாக வீதிகள் மற்றும் நீளம் அளவீடு செய்து கேட்பு பட்டியல் அனுப்ப அறிவுறுத்தப்பட்டது.மொத்தம், 3,301 எண்ணிக்கையில், 466.53 கி.மீ., நீளத்துக்கு தார் ரோடு போட முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.195.63 கோடி செலவாகுமென மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.இதற்கான நிர்வாக அனுமதி வழங்குவதோடு, நிதி ஒதுக்குமாறு, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் அலுவலகத்துக்கு, மாநகராட்சியில் இருந்து கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.இதில், மேற்கு மண்டலத்துக்கு ரூ.52.82 கோடி, வடக்கு - ரூ.47.23 கோடி, கிழக்கு - ரூ.44.28 கோடி, தெற்கு - ரூ.32.54 கோடி, மத்திய மண்டலத்துக்கு ரூ.18.76 கோடி ஒதுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.முதல்வர் அறிவித்த சிறப்பு நிதி என்பதால், விரைவில் ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த ரோடுகளை, 120 பணிகளாக பிரித்து, 'டெண்டர்' கோரி, விரைந்து போடுவதற்கு, மாநகராட்சி பொறியியல் பிரிவினர் திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

சுந்தரம் விஸ்வநாதன்
டிச 03, 2024 17:33

உலகிலேயே சராசரியாக ஒரு கிலோ மீட்டர் நீளம் உள்ள தெருக்களில் அதிக எண்ணிக்கையில் சுமார் ஐம்பது வேகத்தடைகள் உள்ள தெருக்களைக் கொண்ட ஊர் கோவை நகரம் மட்டுமே. இரண்டாண்டுகளுக்கு முன்னர் வீட்டுக் குடி நீர் இணைப்புகளில் மீட்டர் பொருத்தப்போகிறோம் என்று எல்லா வீட்டு வாசல்களிலும் மாநகராட்சியினர் தோண்டினர். அவை அனைத்தும் இப்போது வேகத்தடைகளாகவே உள்ளன. வடவள்ளியில் குறிப்பிட்ட ஒரு வார்டு அமைந்துள்ள பகுதியில், அந்த பகுதி கவுன்சிலர் அதிமுக என்பதால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அந்த பகுதி சாலைகள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சரி செய்யப்படாமலேயே இருக்கின்றன. இப்போது அறிவித்துள்ள இருநூறு கோடி ரூபாய்களில் கமிஷன் எல்லாம் போக ஐம்பது கோடி சாலைகளுக்கு வந்தால் அதுவே கோவை நகர மக்களின் அதிர்ஷ்டம்.


SUBRAMANIAN P
டிச 03, 2024 13:52

எதுக்கு 2 மாசத்துக்கு ஒரு ரோடு போடுறாங்க. 5 வருஷத்துக்கு தாக்கு பிடிக்கிற மாதிரி போடவேண்டியதுதானே


தமிழன்
டிச 03, 2024 12:03

6 நாட்களுக்கு முன்புதான் நான் முதல்வர் தனிப்பிரிவுக்கு ஆன்லைனில் கோவையின் எல்லா மண்டலங்களிலுள்ள தரமற்ற சாலைகளை தரமாக அமைக்க மனு செய்திருக்கிறேன் அதாவது குழி தோண்டும் ...க்கு சரியாக மூடவும், பேட்ச் ஒர்க்கை சரியாக தரமாக அமைக்கவும் வக்கும் திராணியும் கிடையாது எல்லாவற்றிலும் இந்த அதிகாரிகள் ...கள் சாலையில் உள்ள வேகத்தடை எப்படி அமைக்க வேண்டும் என்பதை கூட முறையாக அமைக்க தெரியாத ஊழல் பெருச்சாளிகள் கல் இருந்தால் பல்லாங்குழி ஆடலாம் ரோட்டில் குழி இருக்கிறது என்று எச்சரிக்கை செய்யவே வேகத்தடை உள்ளது எந்தவொரு சாலையும் தரமே கிடையாது சரவணம்பட்டி சத்தி சாலை சிக்னல் சந்திப்பில் 1 ஆடி பாதாள பள்ளம் உள்ளது சுடாலின் மற்றும் சின்ன சுடாலின் கார்கள் 10 முறை கோவை சாலைகளில் ஓடினால்தான் தரமான சாலை அமைப்பானுகள் என்று நினைக்கிறேன்


அப்பாவி
டிச 03, 2024 10:31

குடிநீர் குழாய் பதிக்கிற தத்திகளுக்கு தோண்டத்தான் தெரியும்.எங்க ஊரில் கேபிள் பதிக்கிறேன்னு தோண்டுன இ.பி தத்திகள் வாந்தி எடுத்த மாதிரி மண்ணைக் கலந்து மூடிட்டு போயிட்டாங்க. மிடி காரில் பவனி வந்தால் முதுகு வலிக்கும்னு இருந்த ஸ்பீட் பிரேக்கர்களை நோண்டி எடுத்து அரைகுறையாய் சமனாக்கி ரோடெல்லாம் குஷ்டரோகம் வந்த மாதிரி இருக்கு. இந்த லட்சணத்தில் எத்தனை கோடி ஒதுக்கினாலும் வுழலுக்கு இறைத்த நீர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை