உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசின் சாதனை விளக்க கூட்டம்

அரசின் சாதனை விளக்க கூட்டம்

பொள்ளாச்சி; கோவை தெற்கு மாவட்டம், பொள்ளாச்சி வடக்கு, கிழக்கு ஒன்றிய தி.மு.க., இளைஞரணி சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் மற்றும் தி.மு.க., அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம், வடக்கிபாளையத்தில் நடந்தது.வடக்கு, கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பார்த்தசாரதி வரவேற்றார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மணிமாறன் மற்றும் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.ஒன்றிய செயலாளர் மருதவேல், மாவட்ட செயலாளர் முருகேசன், தலைமை கழக பேச்சாளர் பிரபாகரன் உட்பட பலர், அரசின் சாதனைகளை விளக்கி பேசினர். மாவட்ட அவைத்தலைவர் சுப்ரமணியம், ஒன்றிய அவைத்தலைவர் பரமசிவம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி