உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு டாக்டர்கள் அலர்ட் ஆக இருக்க அறிவுறுத்தல்

அரசு டாக்டர்கள் அலர்ட் ஆக இருக்க அறிவுறுத்தல்

கோவை: கோவை அரசு மருத்துவமனை டாக்டர்கள், தீபாவளியன்று அலர்ட்டாக இருக்குமாறு, டீன் கீதாஞ்சலி அறிவுறுத்தியுள்ளார். டீன் கீதாஞ்சலி கூறியதாவது: தொடர் விடுமுறையுடன் தீபாவளி பண்டிகை வருகிறது. தீக்காயங்களால் பாதிக்கப்படுவோர் சிகிச்சைக்கு வருவர். வெளியூருக்கு செல்லும் டாக்டர்கள் தவிர்த்து, உள்ளூரில் உள்ள டாக்டர்கள் பணிக்கு வரவில்லை என்றாலும், அலர்ட்டாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவிர, பொது மருத்துவம், பிளாஸ்டிக் சர்ஜரி, போன்ற முக்கிய துறை டாக்டர்களின் பணிப்பட்டியல் தயார் செய்யப்படுகிறது. வழக்கமாக டாக்டர்கள் போதுமான அளவில் பணியில் இருப்பார்கள். இருப்பினும், பண்டிகை அவசர சமயம் என்பதால், அழைப்புகளை உடனுக்குடன் எடுக்க, டாக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை