உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புறநகரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் அரசு அலுவலர் ஒன்றியம் வலியுறுத்தல்

புறநகரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் அரசு அலுவலர் ஒன்றியம் வலியுறுத்தல்

கோவை : தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் கோவை மாவட்ட செயற்குழு கூட்டம், அரசு மருத்துவமனை எதிரில் உள்ள பொறியாளர் இல்லத்தில் நேற்று நடந்தது.மாவட்ட தலைவர் முரளி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மூர்த்தி, பொருளாளர் வடிவேல் முன்னிலை வகித்தனர்.அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், ஊர்ப்புற நுாலகர்கள், குடிநீர் தொட்டி ஆபரேட்டர்கள், செவிலியர்கள், பண்ணை பணியாளர்கள், துாய்மை பணியாளர்கள், துாய்மை காவலர்கள் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.அரசு அலுவலர்களுக்கான காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைய வேண்டும். அனைத்து துறைகளிலும் பதவி உயர்வு பட்டியல்களை தாமதமின்றி வெளியிட வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக உதவியாளர்களாக பணிபுரிவோருக்கு கண்காணிப்பாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.அரசு அலுவலர் இறந்தால் வழங்கும் ரூ.5 லட்சத்தை, எட்டு லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். கல்வித்துறையில் இருப்பதைபோல், அனைத்து துறைகளிலும் அனைத்து பணியிடங்களையும் பொது கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் வழங்க வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை விரைந்துநிரப்ப வேண்டும். கோவை மாநகர பகுதியில் பெருகி வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு, புறநகரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டுமென தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி